சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலத்தில் 99.66 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்ஈ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சென்னை மண்டலத்தில் தேர்வு எழுதியவர்களி்ல் 99.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ சென்னை மண்டலத்தில் ஜவஹர் நவோதயா, கேந்திரிய வித்யாலா, தனியார் பள்ளிகள் உள்பட 2,117 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் முறைப்படி 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். சென்னை மண்டலத்தில் ஆந்திரா, கோவா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாமன் அன்ட் டைய்யு, லக்ஷதீப் மற்றும் புதுச்சேரி ஆகியவையும் அடக்கம். மொத்தம் 1,52,024 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இதில் 1,51,509 மாணவ-மாணவியர் அதாவது 99.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் விரும்பினால் மட்டுமே எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் 97,259 மாணவ-மாணவியரே பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர் மற்றவர்கள் பள்ளிகள் நடத்திய தேர்வுகளை எழுதினர் என்று சிபிஎஸ்இ பிராந்திய அதிகாரி டி.டி. சுதர்சன் ராவ் தெரிவி்த்தார்.
சிபிஎஸ்இ முறையின் கீழ் மதிப்பெண்கள் அளிக்காமல் கிரேட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 432 பேர் குறைவான கிரோடான இ1 மற்றும் இ2 பெற்றுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications