லூக் போமேர்ஸ்பேக்குக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற அமெரிக்கப் பெண் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் லூக் போமேர்ஸ்பேக் சிறைக்குப் போக காரணமாக இருந்த அமெரிக்கப் பெண்மணி தாம் கொடுத்த புகாரை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் செம மப்பில் இருந்த லூக் போமேர்ஸ்பேக் அமெரிக்கப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

லூக் மீது புகார் கொடுத்த அமெரிக்கப் பெண்ணின் நடத்தை பற்றி ராயல்சேலஞ்சர் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா டிவிட்டரில் பதிவு செய்த விவகாரம் மேலும் பிரச்சனையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் சித்தார்த் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று அமெரிகப் பெண் நோட்டீஸும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் இருதரப்பினரும் நேற்று டெல்லியில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாகத் தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கப் பெண்ணின் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு கொடுத்த புகாரை திரும்பப் பெறுவதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதேபோல் சித்தார்த்துக்கு எதிரான புகாரையும் அப்பெண் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறார். இதை அமெரிக்கப் பெண்ணின் வழக்கறிஞர் ரஜ்னீஷ் சோப்ராவும் உறுதி செய்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கம் போல டிவிட்டரில் தட்டிவிட்டிருக்கும் சித்தார்த், அப்பாடா! எல்லாமும் முடிவுக்கு வந்துவிட்டது. சீக்கிரமாக லூக் திரும்பி வந்துவிடுவார். எப்பவுமே நான் நண்பர்கள் பக்கம் நிற்பேன். நான் டிவிட்டரில் தட்டிவிட்ட விவகாரமும்கூட யதேச்சையானது. துரதிருஷ்டவசமானதுதான் என்று கூறியிருக்கிறார்.

'அக்வாஃபினா' குடிச்சுக்கிட்டே எழுதி விட்டார் போல சித்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+