ஜெகன்மோகன் ரெட்டி எந்நேரத்திலும் கைது?: ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு அமல்- போலீஸ் குவிப்பு

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பலநூறு கோடி ரூபாய் சொத்து குவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி என்பது சி.பி.ஐ. புகார். இந்த வழக்கில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. சி.பி.ஐ. முன்பு ஆஜரவாவதிலிருந்து விலக்கு கோரி நீதிமன்றப் படிக்கட்டுகளையும் தட்டிப்பார்த்தார் ஜெகன். பயனில்லை. இதைத் தொடர்ந்து மே 28-ந் தேதி சி.பி.ஐ. முன்பு ஜெகன் ஆஜராக உள்ளார்.
இதனிடையே தம்மை சி.பி.ஐ. மூலம் கைது செய்ய ஆந்திர மாநில அரசும் தெலுங்கு தேசம் கட்சியும் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றும்படியும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதிப்பார்த்தார். எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சி.பி.ஐ.யிடம் ஜெகன் ஆஜராவதற்கு முன்பாகவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்ற தகவல் பரவியதால் ஹைதரபாத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜெகனின் ஆதரவாளர்கள் வன்முறையிலும் போராட்டத்திலும் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மே 29-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலை முன்னிட்டுத்தான் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications