நம்பிக்கையோடு இருந்த மக்கள் முதுகில் குத்தி விட்டது மத்திய அரசு- விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளித்துவிட்டு, எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையை உயர்த்தியது என்று பொது மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு, வரலாறு காணாத வகையில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுகள் என அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன் காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று சுமார் 79 ரூபாய் என்ற அளவில் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கடுமையான வரிவிதிப்பின் காரணமாக பெட்ரோலின் விலையில் பாதிக்கு மேல் வரியாக செல்கிறது.
விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக ஏற்கனவே மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இது நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த பொது மக்களின் முதுகில் குத்தியதாகத்தான் நான் கருதுகிறேன்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களான இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோவில் பிரயாணம் செய்பவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த அநியாய விலை ஏற்றத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது விதித்துள்ள அளவுக்கு அதிகமான வரியைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications