வருமான வரித்துறை சோதனையா..?: அதிகாரிகள் உண்மையானவர்களா என்று பாருங்கள்!

திருவொற்றியூரையடுத்த விம்கோ நகரில் மளிகை கடை வைத்துள்ள கனகராஜ் என்பவரின் வீட்டுக்கு வந்த 4 பேர் போலி அடையாள அட்டைகளைக் காட்டி, தங்களை வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, சோதனை நடத்துவது போல நடித்து ரூ. 42 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர்.
போகும்போது ஒரு செல்போன் நம்பரை கொடுத்து அதில் தொடர்பு கொண்டு பேசி பணத்துக்கு கணக்குக் காட்டிவிட்டு திரும்பப் பெற்றுச் செல்லுமாறு கூறியிருந்தனர். ஆனால் அதுவும் போலியான எண் என்று தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இந் நிலையில் சென்னை வருமானவரித் துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கைகள் இவற்றை பின்பற்றி, வருமான வரித்துறை வருமான வரி சோதனைகளை மேற்கொள்கிறது. வர்த்தகம் அல்லது தொழில் நடக்கக் கூடிய இடங்களில் மட்டுமே வருமான வரி சோதனைகள் நடத்தப்படுகின்றன.
வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் நடைபெறாத குடியிருப்புகளில் (வீடுகள்) வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வதில்லை. மேலும் வருமான வரி சோதனைக்கு செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் கண்காணிப்பு அதிகாரிகளான இணை ஆணையர், ஆணையர், முதன்மை துணையர் ஆகியோரின் தொலைபேசி எண்களை கட்டாயம் வழங்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபருக்கு (வரி செலுத்துபவர்) ஏதேனும் குறைகளோ அல்லது வேறு பிரச்சனைகளோ இருந்தால் மேற்கண்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்படும் வருமானவரி சோதனைகளில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ, அல்லது பிரச்சனைகள் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர்கள் (வருமான வரி செலுத்துபவர்) 044-2833 8757 என்ற எண்ணில் வருமான வரித்துறை அலுவலகத்தை (சென்னை) தொடர்பு கொண்டு, வந்திருப்பவர்கள் வருமான வரித்துறையினர் தானா? என்று உறுதி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications