ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல்: எஸ்ஸார், லூப் குழும நிர்வாகிகளுக்கு ஜாமீன்
டெல்லி: நாட்டையே உலுக்கி எடுத்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் எஸ்ஸார் குழுமம் மற்றும் லூப் குழும நிர்வாகிககள் 5 பேருக்கு இன்று சி.பி.ஐ. நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட அரைடஜன் பேர் சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். இன்னமும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கில் எஸ்ஸார் மற்றும் லூப் குழும நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் குழுமத்தின் ரவி ரூயா மற்றும் அதன் நிர்வாகிகள், லூப் டெலிகாம் நிர்வாகிகள் 5 பேருக்கு இன்று சி.பி.ஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரவி ரூபாய், அனுஷ்மன் ரூயா, ஐ.பி. விகாஷ் சராப் ஆகியோருக்கும் லூப் குழுமத்தைச் சேர்ந்த கேதான், கிரன் கேதான் ஆகியோருக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. .அனைவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications