தமிழக எல்லையில் 7 அணைகளைக் கட்ட கேரள அரசு திட்டம்

தமிழர்கள் அதிகம் வாழும் கேரள மாநிலமான இடுக்கியில் உள்ள தோட்டங்களில் தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். இங்குதான் பழமை வாய்ந்த வலுவான முல்லைப் பெரியாறு அணையும் இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று புராணம்பாடி பார்த்து தோற்றுப் போயிருக்கும் கேரளா இப்பொழுது தமிழக நலனுக்கு எதிரான இன்னொரு சதியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் செங்கலாறு, தலையாறு மற்றும் வட்டவாடா என மூன்று ஆறுகளில் புதிய ஏழு அணைகள் கட்டும் திட்டங்களை உருவாக்கி இருக்கிறது.
செங்கலாறு திட்டத்தில் படடிசேரி, கந்தலூர் ஆகிய இரு இடங்களில் இரு அணைகள் கட்டப்பட உள்ளன
தலையாறு திட்டத்தில் அப்பசட்டு, மூனாறு, லோயர்சட்டு மூனாறு மற்றும் தலையாறு ஆகிய இடங்களில் மூன்று அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வட்டவாடா திட்டத்தில் ஒற்றமரம், மற்றும் கொட்டுகொம்பூர் ஆகிய இரு இடங்களில் அணைகள் அமைக்கவும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் ஏழு அணைகள் அமைக்க ஆலோசிக்கபபடுகிறது. நதிநீர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வீணாக செல்வதை தடுக்கவும், சிறிய அளவிலான மி்ன் உற்பத்தி, நீர்பாசனம், விவசாயம் ஆகியவற்றிக்கு பயன்படும் வகையிலும் இந்த அணைகளைக் கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications