உ.பி. சட்டசபையில் பகுஜன் சமாஜ் கடும் அமளி: ஆளுநர் மீது பேப்பர் பால் வீச்சு!
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பின் முதன்முறையாக இன்று சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பி.எல்.ஜோஷியை உரை நிகழ்த்த விடாமல் பகுஜன் சமாஜ் கட்சியினர் தடுத்தனர்.
ஆளுநர் உரையின் தாள்களை கிழித்து எறிந்து, பேப்பர் பால்களை செய்து அதை ஆளுநர் மீதேன வீனர். மேலும் மேஜைகளின் மீது ஏறி நின்று பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் அவையின் மையப் பகுதியில் கூடவே, அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஆளும் சமாஜ்வாடி கட்சியினரும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. இந்த அமளியில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு சிலர் கீழே விழுந்தனர்.
இதையெல்லாம் சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ். நிலைமை கட்டுமீறி போனதையடுத்து அவையை நாளை பிற்பகல் வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
நிதித்துறையை தன் வசம் வைத்துள்ள அகிலேஷ் தான் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் தனது கட்சியினர் நடந்து கொண்ட விதத்தை ஆதரித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இது குண்டர்களின் ராஜ்ஜியம். இவர்களது கையில் ஆட்சி சிக்கி மாநிலம் பாதாளத்துக்குப் போவதை அனுமதிக்க முடியாது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications