பிரதமரை ஊழல்வாதி என்னும் அன்னா குழு, நேர்மையானவர் என்னும் ஹசாரே

அன்னா குழுவினர் சிறப்பு விசாரணை குழு அமைத்து பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், கிரண் பேடி மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் அந்த கடித்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனிப்பட்ட முறையில் பிரதமர் மன்மோகன் நேர்மையான மனிதர். ஆனால் அவரை ரிமோட் கன்ட்ரோல் இயக்குவதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஊழல் அமைச்சர்கள் மீது அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அவரது அமைச்சரவையில் உள்ளவர்களில் 14 பேர் ஊழல்வாதிகள். அப்படி இருக்கையில் அரசு எப்படி லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் என்றார்.
ஊழல்வாதிகள் பட்டியலில் உங்கள் குழு பிரதமரையும் சேர்த்துள்ளதே என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், எனது உதவியாளர்களிடம் இது குறித்து கேட்ட பிறகு உறுதி செய்கிறேன். ஆனால் எனது குழுவினர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வரும் ஜூன் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் எனது குழுவின் சந்திப்பு நடக்கிறது என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரி அமைச்சகம் இருந்தபோது அவர் ஊழல் செய்ததாகவும், 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ப. சிதம்பரம் முறைகேடு செய்ததாகவும் அன்னா குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications