எங்களை குறைகூறும் அதிமுக நடத்துவது தான் உண்மையான கண் துடைப்பு நாடகம்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொல்கத்தா நகரில் பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பேரணியில் சென்றிருக்கிறார்.
பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 31ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. திமுகவும் மே 30ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதற்குப் பிறகு வேறு வழியில்லாததால் அதிமுக 29ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அறிக்கையை விடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது கண் துடைப்பு நாடகம்' என்று கூறியிருக்கிறார்.
பாஜக ஆளும் சிறிய மாநிலமான கோவாவில் ஜெயலலிதாவைப் போல மத்திய அரசையோ, அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளையோ குறை கூறி அறிக்கை விடாமல் உடனடியாக பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வாட் வரியை முழுமையாக ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் டெல்லியைவிட கோவாவில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.12 குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது.
உண்மையில் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் கோவா மாநிலம் செய்ததைப்போல தமிழகத்திலும் பெட்ரோல் மீதான வரியை ரத்து செய்து அறிவித்திருக்க வேண்டாமா?
எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தபோது, "பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்ற அதிர்ச்சியில் இருந்து பொது மக்களை மீட்பது என்பது வரிகளை ஒழுங்குபடுத்தும் மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டுத்தான் இருக்கிறது. இரு அரசுகளும் இதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருப்பது வாக்களித்த மக்கள் மீது எள்ளளவும் அக்கறை இல்லை என்பதைத் தான் காட்டுகிறது' என்று கூறினார்.
அவர் கூறிய யோசனையை இப்போது நடைமுறைப்படுத்த முன்வராமல் ஆர்ப்பாட்டம் நடத்துவது தான் உண்மையான கண்துடைப்பு என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications