இந்திய விண்வெளி திட்டங்கள் முடக்கம்-மாதவன் நாயர் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி: இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஷ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் போன்ற திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்ட்ரிஸ்-தேவாஸ் மல்டி மீடியா ஒப்பந்தம் தொடர்பாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை. இஸ்ரோ நிறுவனத்துக்காக நேர்மையாக உழைத்த எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு பழி வங்கிவிட்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. திட்டப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல புதிய திட்டங்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஸ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தாமல் விடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மாதவன் நாயரின் குற்றச்சாட்டு இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications