சோதனைக் குழாய் மூலம் ஓரே நாளில் பிறந்த 26 குழந்தைகள்-ஈரோடு டாக்டர்கள் சாதனை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் சுதா டெஸ்ட் டியூப் பேபி சென்டர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சோதனை குழாய் சிகிச்சை அளிக்கப்படுகிறது..
இந்த நிலையில் இங்கு சிகிச்சை எடுத்து கொண்ட 19 பெண்களுக்கு ஒரே நாளில் 26 குழந்தைகள் பிறந்துள்ளது. இது ஒரு புதிய சாதனை என்று சுதா டெஸ்ட் டியூப் பேபி சென்டர் டாக்டர் தனபாக்கியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
ஈரோடு, திருச்சி, கோவை, பழனி, கடலூர், கிருஷ்னகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 19 பெண்களுக்கு செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சோதனை குழாய் மூலம் ஓரே நாளில் 26 குழந்தைகள் பிறந்துள்ளது.
இதில் 7 பேருக்கு இரட்டை குழந்தைகளும், 12 பேருக்கு தலா ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த ஆபரேசன்கள் 3 ஆபரேசன் அரங்குகளில் 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினால் நடத்தப்பட்டது என்றார்.
இதேபோல கடந்த 2008ம் ஆண்டு ஓரே நாளில் 20 குழந்தைகள் சோதனை குழாய் சிகிச்சை மூலம் பிறந்தது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications