For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எம்.எல்.ஏ. முத்துசெல்வி பங்கேற்பு

Google Oneindia Tamil News

ADMK protests condemning petrol price hike
நெல்லை: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நெல்லையில் அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும் இன்று தமிழகத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை ரயில் நிலையம் முன்பு அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுதா பரமசிவன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் விஜிலா சத்தியானந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தமிழக வீட்டு வசதி வாரிய தலைவரும், மாவட்ட கழக செயலாளருமான முருகையா பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவை தலைவர் அண்ணாமலை தலைமையில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. முத்துசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே மாநில மாணவரணி செயலாளர் சரவணபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜு, மார்கண்டேயன், சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
ADMK held protests in the state condemning the centre for increasing the petrol price and insisting it to withdraw it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X