'அப்ப' மட்டும் வருவது நியாயமா.. கேட்ட மனைவியை தண்ணீர்த் தொட்டியில் முக்கி கொன்ற கணவன்!
பரமக்குடி ஆசை வரும்போது மட்டும் வருகிறீர்களே இது என்ன நியாயம் என்று கேட்ட மனைவியை தண்ணீர்த் தொட்டிக்குள் முக்கிக் கொலை செய்தார் கணவர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பரமக்குடி அருகே உள்ள காட்டுபரமக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். 24 வயதாகிறது. ஆட்டோ ஓட்டி வருகிறார். பரமக்குடி கனிநகரைச் சேர்ந்த சொரூபராணி இவரது மனைவி ஆவார். இவருக்கு 27 வயதாகிறது. கணவரை விட 3 வயது அதிகம். இருந்தாலும் இல் வாழ்க்கை இன்னல் இல்லாமல்தான் போய் வந்தது.
இந்த நிலையில் பிரபாகரனின் தந்தை மரணமடைநதார். அதற்கு சொரூபராணி வந்த ராசிதான் காரணம் என்று தான்தோன்றித்தனமாக குற்றம் சாட்டினர் பிரபாகரனின் குடும்பத்தார். இதனால் பூசல் வெடிக்கவே, சொரூபராணி தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
ஆனால் மனைவி மீது மோகம் கொண்ட பிரபாகரன் அடிக்கடி தனது வீட்டுக்குத் தெரியாமல் சொரூபராணியைப் போய்ப் பார்த்து வநதார். மனைவியுடன் உல்லாசமாக இருக்கவே அவர் அடிக்கடி அவரது வீட்டுக்குப் போய் வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பிரபாகரன் வீட்டர் ஒரு விஷயமாக வெளியூர் போனார்கள். இதையடுத்து மனைவியை தனது வீட்டுக்குக் கூட்டி வந்தார் பிரபாகரன். அப்போது அவருக்கு்ம், மனைவிக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. ஆசை வரும்போது மட்டும்தான் என் நினைப்பு வருகிறது. மற்ற நேரத்தில் வீட்டுக்குப் பயந்து சாகிறீர்கள் என்று சொரூபராணி புலம்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்தார் பிரபாகரன். ஆத்திரம் கண்ணை மறைக்க மனைவியின் தலையைப் பிடித்து அருகில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் முக்கினார். இதில் மூச்சுத் திணறி சொரூபராணி இறந்து போனார்.
இதையடுத்து ஒரு சாக்கு மூட்டையில் மனைவியின் உடலை திணித்தார். தனது நண்பர் ஒருவரைக் கூப்பிட்டு பழையை பொருட்களை சாக்கு மூட்டையில் வைத்திருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த உதவுமாறும் கூறியுள்ளார். விஷயம் தெரியாத நண்பரும் உதவிக்கு வந்தார்.
இருவரும் சேர்ந்து உடலை அண்டகுடி கண்மாய் அருகே குழிதோண்டி புதைத்து விட்டனர். ஆனால் மனசாட்சி உறுத்தவே நேராக போலீஸில் சென்று சரணடைந்தார் பிரபாகரன்.
போலீஸார் கைது செய்து சொரூபராணியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications