உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது- 6 பேர் பலி
ஜான்பூர்(உத்தர பிரதேசம்): உத்தரப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹெவுராவில் இருந்து டெராடூன் செல்லும் டூன் எக்ஸ்பிரஸ் ரயில்(13009) இன்று மதியம் 1 மணி அளவில் உத்தர பிரதேசம் மாநிலம் மிஷ்ரவன் ரயில் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.
ஜான்பூர் ஜங்ஷனை நெருங்கிய நிலையில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த எஸ்-6, 7,8,9 மற்றும் எஸ்.இ.-1 ஆகிய 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயிலில் பயணித்த அனைவரும் இங்கும் அங்குமாக தூக்கிவீசப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவ இடத்தில் இருந்த மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினர் 6 பேரை இறந்த நிலையில் மீட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காயமடைந்த நிலையில் மீட்டதாகவும் கூறினர். மீட்புக் குழுவினருடன், உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்படும் முன் ரயில் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததாக, ரயிலில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் இதே இடத்தில் நடைபெற்ற ஒரு ரயில் விபத்தில் 24 பேர் பலியானது குறிப்பிடதக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications