செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் பாராட்டு!
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 5வது முறையாக வென்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்தார்.
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் இஸ்ரேல் வீரரை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். 5வது முறை முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில் கூறியிருப்பதாவது
விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் கடினமான டை-பிரேக்கர்' ஆட்டங்களுக்கு பிறகு, இந்த பெருமை மிகு பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் விஸ்வநாதன் ஆனந்த் பெருமை சேர்த்துள்ளார். மகத்தான வெற்றியை பெற்ற தங்களுக்கு என் பாராட்டை தெரிவிக்கிறேன். இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன் என்று அந்த பாராட்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications