தமிழகத்தில் சிகரெட், குட்கா, பான் மசாலா பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்ற மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா, மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவை மனிதர்களின் உயிர்களை பறிக்கும் பொருட்களாகும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் உலக அளவில் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் இறக்கின்றனர்.
புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்க மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, கைனி உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய வேண்டும். மக்களின் நலன் காப்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால் மக்களின் நலன் கருதி புகையிலை பயன்பாட்டை தடுக்க வேண்டிய காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகள் மூலமாகவே புகையிலை பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுத்துறையினருடன் புகையிலை நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு விளம்பரம் செய்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications