For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக காங்கிரஸிலும் கலகக் குரல்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா

By Mathi
Google Oneindia Tamil News

Siddaramaiah
பெங்களூர்: கர்நாடகத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி உட்கட்சி மோதல் நிலைகுலைந்து போய்கிடக்கும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸிலும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. தமது ஆதரவாளருக்கு சட்ட மேலவை சீட் வழங்கப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து மூத்த தலைவர் சித்தராமையா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

சட்டமேலவைக்கு தமது தீவிர ஆதரவாளரான சி.எம். இப்ராகிம் என்பவரை சித்தராமையா பரிந்துரைத்திருந்தார். ஆனால் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பரமேஸ்வர் வெளியிட்டிருந்த அறிக்கையிலோ இப்ராகிம் பெயர் இடம்பெறவில்லை. இதில் செமகடுப்பாகிப் போனார் சித்தராமையா. எப்படியும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் உட்கட்சி மோதலைப் பயன்படுத்தி முதல்வராகிவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த சித்தராமையாவுக்கு ப்ரமேஸ்வர் செக் வைத்துவிட்டது பேரதிர்சியாக இருந்தது.

இதையடுத்து நேற்று இரவு தமது ஆதரவாளர்களுடன் திடீரென ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்திக்கு பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார் சித்தராமையா.

இதனால் கர்நாடக காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்து வீதிக்கு வந்திருக்கிறது.

English summary
After internal turmoil in the ruling BJP, now its the turn of opposition Congress in Karnataka. The split in Congress came to the fore with opposition leader Siddaramaiah deciding to resign from his post after the high command denied tickets to his supporters in the coming Legislative Council election on June 10 and 11.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X