பீகாரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பீகாரில் இருந்து ஒரு சிறுபெண் போனில் தகவல் தெரிவி்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வெடிகுண்டு சோதனையின் முடிவில், அந்த அழைப்பு புரளி என்று தெரியவந்தது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கால்சென்டருக்கு நேற்று நள்ளிரவில் பீகாரில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. இதில் இந்தியில் பேசிய ஒரு சிறுமி சென்னை விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவித்துவிட்டு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. விமான நிலையத்தில் நடந்த சோதனையின் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து போனில் தெரிவிக்கப்பட்ட தகவல் புரளி என்பது தெரியவந்ததால், விமான நிலையத்தில் பரவிய பரபரப்பு அடங்கியது. போலீசாரின் விசாரணையின் போது, பீகாரில் இருந்து அழைத்த அதே எண்ணிற்கு மீண்டும் அழைத்து விசாரித்தனர்.
அப்போது போனில் பேசிய ஒரு பெண், தனது குழந்தை செல்போனை எடுத்து தவறுதலாக பேசியதாகவும், அதற்கு மன்னிக்குமாறு கூறினார். அதை நம்ப மறுத்த போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications