For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தேர்வு குழுக் கூட்டத்தால் பயனில்லை: ஜே.வி.பி.

By Mathi
Google Oneindia Tamil News

Sri lanka
கொழும்பு: தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக கூட்டப்படுகிற நாடாளுமன்ற தேர்வுக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று இலங்கையின் முக்கிய சிங்களக் கட்சியான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தேர்வுக் குழு ஒன்றை மகிந்த ராஜபக்சே அரசு அமைத்துள்ளது. ஆனால் தமிழர்களுக்கு சிறிதளவு அதிகாரம் வழங்கக் கூட சிங்களவர் கட்சிகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்குழுவில் இடம்பெறாமல் இருக்கிறது. இக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெற வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு.

இந்நிலையில் இது போன்ற குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்று நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று ஜே.வி.பி. அறிவித்துளது. நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பது பயனற்றது என்கிறது ஜே.வி.பி.

நாடாளுமன்ற தேர்வுக் குழு என்பதே நாடகம்தான் என்றும் இதனால் எந்த ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் தமிழர்களின் கருத்து. இந்த நிலையில் ஜேவிபியும் புறக்கணித்திருப்பது தமிழர் பிரச்சனைக்கான அமைதித் தீர்வை அந்நாட்டு அரசு உடனடியாக ஏற்படுத்திவிடாது என்பதையே வெளிப்படுத்துகிறது.

English summary
Sri Lanka's Marxist JVP or the People's Liberation Front has said it will skip the Parliamentary Select Committee meeting aimed at negotiating a political solution to the Tamil issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X