உலக சுற்றுச் சூழல் தினம்: ஒன் இந்தியா சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்
உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி, ஒன் இந்தியா சார்பில் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் இன்று பெங்களூரில் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஒன் இந்தியா பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழலை பேணி காப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் அதிகப்படுத்தும் வகையில், நாட்டின் முன்னணி செய்தி தளமான ஒன்இந்தியா சார்பில் இன்று பெங்களூரில் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
இதில், ஒன் இந்தியாவின் செய்திப் பிரிவு மற்றும் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். பெங்களூர், ஜெயநகர் அலுவலகத்தில் துவங்கிய நடைபயணத்தை ஒன் இந்தியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஜி. மகேஷ் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் ஹெப்பார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
ஜெயநகரின் முக்கிய சாலைகள் வழியாக விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
நடைபயணத்தின் முடிவில் ஜெயநகர், பவி பூங்காவில் மரக் கன்று விழா நடந்தது. இதில், ஜெயநகர் எம்எல்ஏ பி.என்.விஜயகுமார், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகுமார், "சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறி்த்து விளக்கினார். மேலும், சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் பொதுமக்களும் ஆர்வமுடன் முன்வர வேண்டும்,"என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஒன் இந்தியா குழும தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் ஹெப்பார் கூறுகையில், சுற்றுச் சூழலை பாதுகாக்க மரங்கள் அவசியம். மரங்களால் காற்று மாசுபாட்டை தவிர்ப்பதோடு, மழை பொழிவையும் அதிகப்படுத்த முடியும். எனவே, மரம் வளர்ப்புக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்," என்று, வலியுறுத்தினார்.
(ஒன் இந்தியாவின் சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு நடைபயணத்தின் ஒரு சில பதிவுகள்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications