கடல் சீற்றத்தால் கச்சத்தீவு அருகே மூழ்கிய படகுகள்- உயிர் தப்பிய மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற 2 படகுகள் கச்சத் தீவு அருகே கடலில் மூழ்கின.
மீன்பிடித் தடைக் காலம் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. படகுகள் கடலில் மூழ்குவதும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.
மண்டபம் கோயிலடியைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களின் 2 படகுகள் கடலில் மூழ்கின. அதில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து சக மீனவர்களின் படகுகளில் ஏறி உயிர் தப்பினர்.
தங்களது படகுகள் மூழ்கியது குறித்து இந்திய கடற்படைக்குத் தெரிவித்தும் அவர்கள் உதவவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications