முல்லைப் பெரியாறு அணையின் துளைகளை அடைக்க கேரளா மீண்டும் எதிர்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு அணையில் துளையிட்டு மண் மாதிரி எடுத்து. பரிசோதனையில் அணை பலமாக உள்ளதாகவும், அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும் அந்த குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அவர்கள் போட்ட துளைகளை அடைக்க அந்த குழு உத்தரவிட்டது.
துளைகளை அடைக்க தமிழக பொறியாளர்கள் முயன்ற போது அவர்களை கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பருவ மழை துவங்கும் முன்பு துளைகளை அடைக்காவிட்டால் மழை நீர் தேங்கி அணை பலவீனமாகும் என்று தமிழக பொறியாளர்கள் வருத்தம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 27ம் தேதி இந்த விவகார்ம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதன் பிறகு துளைகளை அடைக்க கேரளா அனுமதி அளித்தது. இதையடுத்து துளைகளை அடைக்க தமிழக பொறியாளர்கள் 5 லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் அணைக்கு சென்றனர். ஆனால் கேரள வனப்பகுதியில் அவர்களை அம்மாநில வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். சிமெண்ட் லாரிகளை வனப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
தமிழக பொறியாளர்கள் எவ்வளவு கூறியும் கேரள வனத்துறை அதிகாரிகள் அதை கேட்கவில்லை. இதையடுத்து லாரிகள் தமிழகத்திற்கே திரும்பின. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இன்று கேரளாவில் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணையை பலமிழக்கச் செய்தால் தான் புதிய அணை கட்ட முடியும் என்று கேரள நினக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications