காயிதே மில்லத்தின் 117வது பிறந்நாள் விழா: தலைவர்கள் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காயிதே மில்லத்தின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

காயிதே மில்லத்தின் 117வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் கட்சி தலைவர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் அதன் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், வசந்தி ஸ்டான்லி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, செங்கை சிவம், பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், சுரேஷ்குமார் ஆகியோர் ஊர்வலமாக வந்து திருவல்லிக்கேணி நினைவிடத்தில் மலர்போர்வை போர்த்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஜே.எம். ஹாரூண் எம்.பி., ராயபுரம் மனோ, ஜி.ஆர்.வெங்கடேஷ், வி.பி.ஜவஹர்பாபு, ரங்க பாஷ்யம், புல்லட் சாகுல், எஸ்.கே. நவாஸ், அகரம் கே.பி.அலி, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் செந்தாமரைக் கண்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சீமா பஷீர், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன் ஆகியோர் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

இவர்கள் தவிர பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மாநில பொருளாளர் முகம்மது யூசுப், வன்னி அரசு, மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, இரா.செல்வம், ஆளுர் ஷாநவாஸ், முபாரக், ராயபுரம் அகமது, அஜ்மல்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) காதர் மொய்தீன், அப்துல் ரகுமான் எம்.பி., தேசிய லீக் பஷீர் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாவூத் மியான்கான் உள்பட்டோரும் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்போர்வை போர்த்தினார். அவருடன் அவரது கட்சி நிர்வாகிகள் எஸ்.துரை, திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன், எஸ். வேதா, ஏ.முரளி, வைத்தியநாதன், கே.ஜி.எஸ்.சுரேஷ், என்.ராஜசேகர், தாமு, சுனில், ராஜி கே.சுரேஷ் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத் தலைவர் கா.லியாகத் அலிகான் தலைமையில் துணைத் தலைவர் பிலோமின் ராஜ், செயலாளர் யாசின் அகமது, பொருளாளர் எஸ்.ராமலிங்கம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.ஏ.நாகூர் மீரான் மற்றும் அன்பு சரீப், வண்ணை அபுபக்கர், கம்பம் சுல்தான், பஷீர் அகமது, பீர் முகமது, அபுல் ஹசன் உள்ளிட்ட பலர் காயிதே மில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை போர்த்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+