ஈழத்தமிழர் விவகாரம்: முதல்வராக இருக்கையில் கருணாநிதிக்கு அக்கறை வரலையே: டி.ஆர்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை தலைமை அஞ்சல் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் பேசியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது. அந்த அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரை 39 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. மத்திய அரசில் கூட்டணி வகிக்கும் திமுகவும் இதற்கு பொறுப்பாகும்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் திமுக இருந்தது. அப்போது மத்திய அரசில் இருந்து விலகுமாறு திமுகவை கேட்டுக் கொண்டோம். ஆனால் கருணாநிதியோ பதவிக்காக மத்திய அரசில் இருந்து விலகவில்லை.
தற்போது மட்டும் இலங்கைத் தமிழர் உரிமைக்காக போராடுவதாக கருணாநிதி கூறுவது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்.
மேலும் பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு அதில் அங்கம் வகிக்கும் திமுகவும் காரணம் ஆகும். ஆனால் கருணாநிதி பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பேசி மக்களை ஏமாற்றுகிறார். கருணாநிதி உண்மையாகவே மக்களுக்காக போராடுபவர் என்றால் முதலில் மத்திய அரசில் உள்ள திமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications