புலிக்கொடிகளுடன் லண்டனில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் கண்டன போராட்டம்!
லண்டன்: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் மகுடம் சூடிய வைர விழா நிகழ்ச்சிக்காக லண்டன் வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லண்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் ராஜபக்சே வந்திறங்கிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபக்சேவை அதிரச் செய்யும் வகையில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பினன்ர் ராஜபக்சே தங்கியிருக்கும் ஹில்டன் விடுதி முன்பாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். லண்டனை விட்டு ராஜபக்சே வெளியேறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இங்கிலாந்து அரசே வெளியேற்று என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல அமைப்புகளின் சார்பில் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே லண்டன் வந்தபோதும் இதேபோல் கடுமையான எதிர்ப்புடன் போராட்டங்கள் நடைபெற்றதால் அவர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications