For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தையால் உயிருக்கு ஆபத்து என்று அழுதுகொண்டே இருந்தார் பார்கவி: நிர்மலா பெரியசாமி

Google Oneindia Tamil News

Nirmala Periyasamy
சென்னை: பார்கவி தனது தந்தை குறித்தும், அவர் செய்ததாக கூறப்படும் 3 கொலைகள் குறித்தும் உறுதிப்படுத்திய பின்னர அந்த டாக் ஷோவை ஒளிபரப்பினோம் என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் நடத்துனர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பார்கவி நிகழ்ச்சியி்ன்போது தனது தந்தை குறித்து அச்சம் தெரிவித்தபடியே இருந்தார். ஏன் பயப்படுகிறாய் என்று அவரிடம் நான் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டபோதுதான் அவர் கண்ணீர் விட்டு அழுதபடி தனது தந்தை மூன்று கொலைகளைச் செய்ததாக கூறினார். அதேபோல தன்னையும், தனது காதலரையும் அவர் கொலை செய்து விடலாம் என்றே தான் அஞ்சுவதாகவும் அவர் கூறினார்.

பார்கவி சொன்ன தகவலால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதையடுத்து அவர் சொல்வது உண்மையா என்பதை அறிய எங்களது நிறுவ அதிகாரிகள் சிலரை பார்கவியின் ஊருக்கு அனுப்பி வைத்தோம். லாவண்யா, சேகர், சிலம்பரசன் ஆகியோர் காணாமல் போனது உண்மைதான் என்பது அப்போது எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து நிகழ்ச்சியை மே 28ம் தேதி ஒளிபரப்பினோம் என்றார் நிர்மலா பெரியசாமி.

English summary
The anchor of the show on Zee Tamil, Nirmala Periyasamy, who tried to mediate between the girl and her parents during the show, said, "The girl was constantly telling us that she was afraid of her father, as he may murder her and her husband. When I repeatedly questioned her, the girl broke down and told us that her father had murdered three persons in their house in 2008." The anchor said the channel sent officials to the village to verify the girl's claim. "We sent a crew to the village and tried to verify if what the girl had said was true. We found that three persons, Lavanya, Silambarasan and Sekar, had gone missing from the village in 2008. It was only after confirming this, that we telecast the programme on May 28," she added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X