மதுரை அருகே லாரி மீது பஸ் மோதி தாய், மகன் உட்பட 4 பேர் பலி-35 பேர் காயம்
மதுரை: மதுரை அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில், தாய், மகன் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் பஸ் இடிபாடுகளில் சிக்கிய 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட பணிகள் பயணித்தனர். பஸ்சை தூத்துக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (52) ஓட்டி வந்தார். பஸ் நடத்துநராக விஜயன் இருந்தார். அந்த பஸ் நேற்று அதிகாலையில் 3.30 மணியளவில் மதுரையை வந்தடைந்தது. அதன்பிறகு அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் காலை 4.30 மணி அளவில் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூரிலிருந்து நெல்லைக்கு, சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நடத்துநர் விஜயன், கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி(27), அவரது மகன் ஸ்ரீதரன்(3), மற்றும் சாந்தி(35) ஆகியோர் இறந்த நிலையி்ல் மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த பார்வதி, சின்ன முனியாண்டி, பரமேஸ்வரி, குமார், செல்லகுட்டி உள்பட 35 பேர் சிகிச்சைக்காக மதுரை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தாசில்தார் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி இன்ஸ்பெக்டர் சுபகுமரன் விசாரித்து வருகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications