For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடு இருந்தால் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பாகப் பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் நேற்று கருணாநிதியை சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கிறாரே, என்ன காரணம்?

கருணாநிதி: டெல்லிக்குப் போகக்கூடாதா என்ன?

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?

கருணாநிதி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே இங்கே வந்த மத்திய அமைச்சர் அந்தோணியிடம் விளக்கியிருக்கிறோம். உங்களிடமும் அதைப்பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: சேலத்தில் ராஜேந்திரன் அணியினருக்குத்தான் கட்சியில் பதவி தருவதாகவும் வீரபாண்டி அணியினரை புறக்கணிப்பதாகவும் சொல்கிறார்களே?

கருணாநிதி: அதெல்லாம் உங்கள் பத்திரிகை செய்திகள். நாட்டு நடப்பு அல்ல.

கேள்வி: கி.வீரமணி குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: அது அவருடைய கருத்து. அதில் நான் அவருடன் முரண்படவில்லை.

கேள்வி: உள்கட்சித் தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா?

கருணாநிதி: இப்போது தேர்தல் நடக்கவில்லை. இன்னும் ஓராண்டு இருக்கிறது.

கேள்வி: ஓராண்டுக்குப் பிறகு?

கருணாநிதி: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன் என்றார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has said that he will contest in party presidential polls next year, if he is alive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X