For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயஸ் கார்டனில் இணைந்த கைகளாக கலக்கும் இளவரசி, அனுராதா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் அதிகாரம் மிக்க பகுதியான போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவிற்கு இணையாக அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் அனுராதா ஆகியோர் வலிமை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

போயஸ் கார்டனில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலா வெளியேற்றப்பட்டு, தற்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருடைய இடத்திற்கு அடுத்து வலிமையான நபர் யார் வருவார் என்று அதிமுக வட்டரத்தில் ஒரு பட்டிமன்றமே நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் சகோதரர் தினகரன், கணவர் நடராஜன், அவரது தம்பி ராமசந்திரன், சசிகலா உறவினர் ராவணன் உள்ளிட்ட சுமார் 14 பேர்களை கட்டம் கட்டிய ஜெயலலிதா இளவரசி, அனுராதா ஆகிய இருவருக்கு மட்டும் கருணை காட்டினார்.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசி மீது ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தனிப்பட்ட பாசம் உண்டாம். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி ஜெயராமன் இறந்து போனார். இதனால் இளவரசி மீது ஜெயலலிதாவிற்கு கருணை ஏறப்பட்டுள்ளது. அப்போது முதல் ஜெயலலிதாவிற்கு உதவிகரமாக இளவரசி போயஸ் கார்டனில் தங்கிவிட்டாராம். இதனால் அவரது குடும்ப செலவுகளையும் முதல்வர் ஜெயலலிதாவே ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அதிமுக முன்னாள் எம்.பி. தினகரனின் மனைவி அனுராதா. ஜெயா டி.வி.யின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் அனுராதா டாக்டர் வெங்கடேஷின் சகோதரி. முன்னாள் எம்.பி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவருமே ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட நிலையில் அனுராதா மீது ஜெயலலிதா கருணை காட்டுவது அதிமுக வட்டாரத்தை திகைக்க வைத்துள்ளது.

சசிகலாவின் இடத்துக்கு அடுத்து வரப்போவது இளவரசி மற்றும் அனுராதா தான் என்கிற பேச்சு தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

English summary
ADMK chief cum CM Jayalalithaa is so generous in Sasikala's relatives Ilavarasi and Anuradha's matters. Talks are there that Ilavarasi and Anuradha may come to Sasikala's place in Poes Garden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X