பெரு ஹெலிகாப்டர் விபத்து: 8 கொரியர்கள் உட்பட 14 பேரும் பலி
Subscribe to Oneindia Tamil
ஹெளலா-ஹெளலா: பெரு நாட்டில் மலையில் மோதி ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பெருநாட்டில் அமேசான் வனப்பகுதிக்குட்பட்ட மாட்ரீ டி டையோஸ்நகரில் இருந்து கஸ்கோ என்ற இடத்துக்கு 14 பயணிகளுடன் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. மமாரோசா பகுதிக்குச் சென்றபோது பனிமூட்டம் காரணமாக மலை ஒன்றின் மீது மோதி வெடித்தது. இதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து துண்டு துண்டாக சிதறியது.
இதில் பயணம் செய்த 14 பேரும் பலியாகினர். அவர்களில் ஹெலிகாப்டர் ஊழியர்கள் 2 பேர் பெருநாட்டை சேர்ந்தவர்கள். தென் கொரியாவைச் சேர்ந்த 8 பேரும், மூன்று ஐரோப்பியர்களும் இதில் அடக்கம். பலியான கொரிய நாட்டவரில் மூவர் சாம்சங் நிறுவன பணியாளர்கள். மற்றொருவர் கொரியாவின் அரசு அதிகாரி என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications