நிலக்கோட்டையை அடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்திலும் ஐ. பெரியசாமி ஜாமீன் மனு தள்ளுபடி!
திண்டுக்கல்: முறையான அனுமதி பெறாமல் கல்குவாரி நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இரண்டாவது ஜாமீன் மனுவை திண்டுக்கல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அய்யம்பாளையம் அருகில் குட்டிக்கரடு மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள கல்குவாரியில் அரசு அனுமதி இன்றி அங்குள்ள கல்லை உடைத்து எடுத்து அரசுக்கு ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரன் மீது கிராம நிர்வாக அலுவலர் பரஞ்சோதி புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் முரளிதரனை கைது செய்து நிலக்கோட்டை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முரளிதரன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை நிலக்கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐ.பெரியசாமி ஜாமீன் கோரி திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications