'ரெய்சினா ஹில்' அப்படிங்கிறாங்களே, அப்படின்னா என்ன?

Subscribe to Oneindia Tamil

Rastrapathi Bhawan
டெல்லி: சமீப காலமாக நியூஸ் பேப்பரை எடுத்தாலும் சரி, ஆங்கில இணையதளங்களைப் பார்த்தாலும் சரி, ஆங்கில டிவி செய்திகளைப் பார்த்தாலும் சரி ரெய்சினா ஹில் என்ற வார்த்தை ஓவராக அடிபடுவதைப் பார்க்கலாம். அந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா...? தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்.

வெள்ளையர் ஆட்சியின் ஆரம்பத்தில் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தாதான் இருந்து வந்தது. வெள்ளைக்கார அரசாங்கம் தலைநகரை டெல்லிக்கு மாற்ற தீர்மானித்தது. 1911ல் தலைநகராக டெல்லி உருவானது. இதற்காக ஒரு திட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தலைநகருக்குத் தேவையான அலுவலகங்கள், கட்டடங்களை உருவாக்க இடம் பார்த்தது.

தற்போது உள்ள டெல்லி நகருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சற்று உயரமான பகுதியில் தலைநகரின் தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை அமைக்க தீர்மானமாயிற்று. இந்த உயரமான இடம்தான் ரெய்சினா ஹில் என்று அழைக்கப்படுகிறது.

பரந்து விரிந்த இந்த இடம் டெல்லியின் பிற பகுதிகளை விட 741 அடி உயரம் கொண்டது இந்தப் பகுதி. இதனால்தான் இதை 'ஹில்' என்று அழைக்கிறார்கள்.

இந்த பகுதியில்தான் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ளது. இதனால்தான் குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்பான செய்திகளின்போது ரெய்சினா ஹில்லை அலங்கரிக்கப் போவது யார் என்று கூறுகிறார்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகையைத் தவிர பிரதமரின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம், மத்திய அரசின் தலைமைச் செயலக கட்டடம், அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவை இணைந்த பிளாக் உள்ளது.

மேலும் நாடாளுமன்றம், ராஜ்பாத், விஜய் செளக், இந்தியா கேட் உள்ளிட்டவையும், பல முக்கிய அரசு அலுவலகங்களும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட முக்கியமான இடம்தான் ரெய்சினா ஹில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+