கோவில்பட்டி: இந்தி ஆதரவு உண்ணாவிரத பந்தலில் மோதல்: 2 பேர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த இந்து ஆதரவு உண்ணாவிரத போராட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியை ஒரு பாடமாக கற்பிக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது துண் அமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதத்திற்கு ஐந்தாவது துண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்ததை பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் மாலை 3 மணி அளவில் பைக்கில் வந்த 2 பேர் உண்ணாவிரத பந்தலில் அத்துமீறி புகுந்து மைக்குகளை பிடுங்கி போராட்டக்காரர்களை பேச விடாமல் இணைப்பை துண்டித்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஐந்தாவது துண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கத்தை மர்ம நபர்கள் கடித்ததால் அவர் அலறி துடித்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மோதல் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாரி்முத்து, காளிராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications