ஆபரேஷனில் சுயநினைவை இழந்து 12 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண்
குமரி: ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்ற பெண் கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். ஆபரேஷனின்போது சுயநினைவை இழந்தவர் இன்னும் கண் விழிக்கவேயில்லை.
குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்துள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்மன். இவருக்கு வனஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் ஷோபா போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். அவரை 1998ம் ஆண்டு குலசேகரத்தை அடுத்துள்ள செருப்பலூர் ரமேஷ்பாபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ரமேஷ்பாபு எலக்ட்ரீசியனா வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிரவசத்திற்காக ஷோபாவை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிரவச வலி ஏற்படாததால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆபரேஷனில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ஷோபாவின் நிலைமை கவலைக்கிடமானது. இரவு 7 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்ட ஷோபாவை 11 மணி வரை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்கள் தகராறு செய்ததை அடுத்து தான் உள்ளே அனுமதித்தனர். அப்போது ஷோபா வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 40 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லை. பின்னர் பல மருத்தவமனைகளுக்கு கொண்டு சென்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக நினைவு திரும்பாமல் தொடர்ந்து கோமாவிலேயே இருக்கிறார். அவருக்கு பிறந்த பெண் குழந்தை ஆஷா தற்போது 8ம் வகுப்பு படித்து வருகிறார். மனைவிக்கு நினைவு திரும்பும் என காத்திருத்த ரமேஷ்பாபு சில ஆண்டுகளுக்கு முன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மகளின் நிலையை கண்டு மனம் நொந்த சேர்மன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கோமாவில் இருக்கும் ஷோபாவை அவரது அம்மா வனஜா, பாட்டி இருவரும் பராமரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications