பராமரி்ப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில் நேரங்கள் இன்று முதல் மாற்றம்

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜூன் 15, 16, 17ம் தேதிகளில் ரயில் சேவை குறித்த விவரம் வருமாறு:
ரயில் எண் 16736: திருச்செந்தூரில் இருந்து புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் 50 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்னைக்கு 70 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
ரயில் எண் 12606: திருச்சியில் இருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டு, சென்னைக்கு 70 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
ரயில் எண் 12636: மதுரையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 25 நிமிடம் நிறுத்தப்பட்டு சென்னைக்கு 40 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
ரயில் எண் 22403 மற்றும் 14259: புதுச்சேரி-புது டெல்லி இடையிலான ரயில் மற்றும் ராமேஸ்வரம், வாரனாசி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டியில் 85 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 16127: சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டிவனத்தில் 30 நிமிடங்களும், மயிலத்தில் 50 நிமிடங்களும் நிறுத்தப்படும்.
ரயில் எண் 16853: சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி இடையில் இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ஒலக்கூரில் நிறுத்தப்பட்டு, 80 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 12635: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு மதியம் 12.45 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 45 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.
ரயில் எண் 56037 மற்றும் 56041: சென்னை எழும்பூர்- புதுச்சேரி, திருப்பதி-பாண்டிச்சேரி இடையிலான ரயில் திண்டிவனத்தில் நிறுத்தப்படும். புதுச்சேரியில் இருந்து இயங்காது.
ரயில் எண் 12898 மற்றும் 18496: புவனேஸ்வர்- புதுச்சேரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர், ஒலக்கூர், திண்டிவனத்தில் நிறுத்தப்பட்டு 96 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ஜூன் 18ம் தேதி ரயில் சேவை குறித்த விவரம்,
ரயில் எண் 16736: திருச்செந்தூரில் இருந்து புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூருக்கு 50 நிமிடம் தாமதமாக வந்தடையும்.
ரயில் எண் 12606 : திருச்சியில் இருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் 60 நிமிடம் தாமதமாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 12636 : மதுரையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 60 நிமிடம் தாமதமாக சென்னை வந்தடையும்.
ரயில் எண் 66046: விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 66045: மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையிலான பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 16127: சென்னை எழும்பூர்-குருவாயூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் 60 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 16853: சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 12635: சென்னை எழும்பூர்- மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடம் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படும்.
ரயில் எண் 56041 : திருப்பதி-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரயில் 80 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 66045: மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 18496: புவனேஸ்வர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 66046: விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையிலான பயணிகள் ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்படும்.
ஜூன் 20ம் தேதி ரயில் சேவை குறித்த விவரம்,
ரயில் எண் 16736: திருச்செந்தூரில் இருந்து புறப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 12606: திருச்சியில் இருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 12626: மதுரையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 22403 மற்றும் 14259: புதுச்சேரி-புது டெல்லி, ராமேஸ்வரம்-வாரனாசி எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக கூடூர் வந்தடையும்.
ரயில் எண் 16127: சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 16853: சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 12635: சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாகும்.
ரயில் எண் 56037: சென்னை எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரயில் 30 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 56041: திருப்பதி-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரயில் 45 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
ரயில் எண் 12898 மற்றும் 18496: புவனேஸ்வர்-புதுச்சேரி, புவனேஸ்வர்-ராமேஸ்வரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் 30 நிமிடம் தாமதமாக விழுப்புரம் செல்லும்.
விழுப்புரம் அருகே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 15 (இன்று) முதல் ஜூன் 20ம் தேதி வரை இந்த முறை அமலில் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications