பாஜக கூட்டணியிலும் குழப்பம்; கலாமுக்கு பாஜக, அன்சாரிக்கு நிதிஷ் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பாஜக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும், ஐக்கிய ஜனதா தளம் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கிய கூட்டங்கள் நடத்தி வருகின்றன. இதில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பாஜக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய ஜனதாதளமோ துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது.

இதற்கிடையே ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் குழம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+