சங்மா VS கலாம் ; ஜெயலலிதா VS மமதா - குடியரசுத் தலைவர் தேர்தல் விசித்திரங்கள்

Subscribe to Oneindia Tamil

Sangma, Jayalaitha, Mamata and Abdul kalam
டெல்லி: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்புக்குள்ளாகியிருப்பது மட்டுமல்ல விநோத காட்சிகள் பலவற்றையும் உருவாக்கியிருக்கிறது.

- வடகிழக்கு மாநிலத்தவரான சங்மாவை தமிழ்நாட்டின் ஜெயலலிதா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கிறார்.

-இதற்கு நேர்மாறாக தமிழகத்து அப்துல்கலாமை மேற்குவங்கத்து மமதா குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்கிறார்

- மேற்கு வங்கத்தின் பிரணாப் முகர்ஜிதான் வேட்பாளர் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். ஆனால் அவரா! கூடவே கூடாது என்று அடம்பிடித்து கூட்டணியையே முறிக்கிறார் மமதா

- தமிழகத்தின் அப்துல்கலாமை நிறுத்தலாம் என்று அடம்பிடிக்கிறார் மமதா. நாட்டின் இன்னொரு மூலையான பஞ்சாபில் இருந்து கூட கலாமுக்கு ஆதரவுக் குரல் கேட்கிறது

- ஆனால் தம்மை சந்தித்த அத்வானியிடம் வடகிழக்கு மாநிலத்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டுகிறார் தமிழகத்து ஜெயலலிதா. இன்னொரு பிரதான கட்சியான திமுகவோ. காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரைத்தான் ஆதரிப்போம். என்று கூறி கலாமை கழட்டிவிட பார்க்கிறது.

- கடந்த முறை பிரதீபா பாட்டீலை கொண்டுவந்ததே தாங்கள்தான் என்று பெருமைபேசும் திமுக இம்முறை கலாமுக்குக் கூடுதல் வாய்ப்பிருப்பதாக சொன்னாலும் என்ன காரணத்துக்காகவோ "பசை"யாகவே காங்கிரஸிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

- 1984-ம் ஆண்டு எந்த சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்து எம்.பியாக அடிஎடுத்து வைத்தாரோ அதே சோம்நாத் சட்டர்ஜியைக் கூட குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கலாம் என்கிறார் மமதா பானர்ஜி

- சோம்நாத் சட்டர்ஜி பழுத்த இடதுசாரித் தலைவர்- அவரை மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முன்னிறுத்த முயன்றாலும் 1968 முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் அயராது பாடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியோ கண்டு கொள்ளவே இல்லை... 2008-ல் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால் அவர் வேண்டாதவராகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+