ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறும் மமதா மத்திய அரசுக்கான ஆதரவையும் வாபஸ் பெறுகிறார்?

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தீர்மானிக்கக் கூடாது.. கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொல்கத்தாவிலிருந்து டெல்லி புறப்படும் முன்பு மமதா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால் டெல்லியில் காஙகிரஸ் கட்சியோ பிரணாப் அல்லது ஹமீத் அன்சாரிதான் சாய்ஸ் என்று திட்டவட்டாமகத் தெரிவிக்க போர்க்கோலம் பூண்டார் மமதா.
முலாயம்சிங்குடன் கரம்கோர்த்து அப்துல் கலாம், சோம்நாத் சட்டர்ஜி இல்லையெனில் ஏன் மன்மோகன்சிங்கை கூட நிறுத்தலாம் என்று அதிரடியாக அறிவிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் களம் படுசூடானது. பிரணாப்பை நிறுத்தினால் நிச்சயம் கலாமை நிறுத்துவேன் என்று சபதமும் போட்டிருக்கிறார் மமதா.
மமதாவின் இத்தனை ஆவேசத்துக்கும் அசராத காங்கிரஸ் கட்சி, மமதா இல்லாமலேயே இன்று பிரணாப் பெயரை இறுதியாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ஆளும் மத்திய அரசிலிருந்து விலகுவது என்று திரிணாமுல் சார்பில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மமதாவிடமும் அவர்கள் பேசியுள்ளனர். இதேபோல் மேற்கு வங்க அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications