புதுக்கோட்டை இடைத் தேர்தல் - 'சைலண்ட்' ஆன கேப்டன் டி.வி. !

Subscribe to Oneindia Tamil

Captain TV
புதுக்கோட்டை : புதுக்கோட்டை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்காமல் மவுனம் காத்தது கேப்டன் டி.வி.

தேமுதிக-வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி கேப்டன் டிவி. இந்த டிவி-யில் தான் தேமுதிக குறித்த நிகழச்சிக்கும், அதன் தலைவர் விஜயகாந்த் பேச்சு, அறி்க்கை போன்றவற்றிக்கு முன்னுரிமை அளிக்கும். ஆனால் தேமுதிக தொடர்பான முக்கிய நிகழ்வுகளின்போது இந்த டிவியில் அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள், கமுக்கமாக இருப்பார்கள்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல் துவங்கிய நிலையில் இருந்து, புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சார ஊடகமாக கேப்டன் டி.வி இருந்தது வந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை இடைத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் துவங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் தான் ஆரம்பத்திலிருநேதே முன்னிலையில் இருந்தார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தல் குறித்த தகவல்களை ஆளும் கட்சி தொலைக்காட்சியான ஜெயா டிவி, மற்றும் ஜெயா பிளஸ் டிவிக்கள் ஒவ்வொரு நிமிடத்திற்குள் நடக்கும் தகவல்களை அளித்து வந்தன.

அதே போல நடுநிலை சொலைக்காட்சிகளான புதிய தலைமுறை, ராஜ் செய்திகள், ஜி செய்திகள், என்.டி.டி.வி. ஹிண்டு மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகள் வழங்கின.

ஆனால், புதுக்கோட்டையில் தேமுதிகவிற்கு தோல்வி முகம் ஏற்பட்டதால், வெற்றி வேட்பாளர் யார் என்றும், எத்தனை சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது என்றும் அறிவிக்காமல் கேப்படன் டிவி மவுனம் காத்தது.

இத்தனைக்கும் இங்கு இதுவரை பெறாத அளவுக்கு தேமுதிக வேட்பாளர் வாக்குகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பரபரப்பான புதுக்கோட்டை தேர்தல் ரிசல்ட்டின் போது சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியது.

முன்பு கேப்டன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் எல்.கே.சுதீஷ் சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல்,

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஒரு சேனலை கொண்டு வர வேண்டும் என்று விஜயகாந்த் விரும்பியதன் விளைவே இப்போது கேப்டன் டி.வியாக உருவெடுத்திருக்கிறது.

இப்போது ஆசிய கண்டம் முழுவதும் கேப்டன் டி.வி.யில் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். விரைவில் ஐரோப்பா கண்டத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தெரியும்.தினமும் 4 முறை செய்திகள் ஒளிபரப்பாகும் செய்திகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் நடக்கும் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ஆனால் முக்கிய நிகழ்ச்சிகளின்போது முக்காடு போட்டுக் கொண்டு விடுகிறது கேப்டன்... ஏனோ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+