புதுக்கோட்டை-2006ல் வாங்கியதை விட பல மடங்கு ஓட்டு வாங்கிய தேமுதிக!

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவும், தேமுதிகவும் போட்டியிடவில்லை. இரண்டுமே அப்போது கூட்டணிக் கட்சிகள். இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.
இதற்கு முன்பு அதிமுகவும், தேமுதிகவும் இந்தத் தொகுதியில் 2006ல் நடந்த பொதுத் தேர்தலில்தான் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்தத் தேர்தல்தான் தேமுதிகவுக்கு முதல் சட்டசபைத் தேர்தலாகும்.
2006ல் நடந்த தேர்தலில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட நெடுஞ்செழியன் 64,319 வாக்குகளைப் பெற்றார். 2வது இடத்தைப் திமுகவின் ஜாபர் அலி பெற்றார். வெற்றி வித்தியாசம் வெறும் 1950 மட்டுமே. தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஜவஹர் டெபாசிட் இழந்தார். அவருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் 6880. அக்கட்சிக்கு 4வது இடம் கிடைத்தது.
இப்போது நடந்துள்ள இடைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் புறக்கணிப்பு புண்ணியத்தால் தேமுதிகவுக்கு உயர்வு கிடைத்துள்ளது. வெற்றி பெறும் நிலையில் அக்கட்சி இல்லை என்ற போதிலும் சொல்லிக் கொள்ளும்படியான செய்திகள் நிறையவே உள்ளன.
- கடந்த 2006 பொதுத் தேர்தலை விட இப்போது கூடுதலான வாக்குகளை தேமுதிக இத்தொகுதியில் பெற்றுள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம்.
- கடந்த முறை 4வது இடத்தைப் பெற்ற தேமுதிக இம்முறை 2வது இடத்தைப் பெற்றுள்ளது. இது நிச்சயம் தேமுதிக தரப்புக்கு சந்தோஷமான விஷயம்தான்.
தேமுதிகவுக்குக் கிடைத்துள்ள கூடுதல் வாக்குகளுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்ட ஓட்டுக்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
