கொச்சி- மங்களூர் எரிவாயு திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு: ஜெ. தலையிட கோரிக்கை
சென்னை : கொச்சி - மங்களூர் இடையேயான எரிவாயு குழாய் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயாலளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது
கொச்சின் - மங்களூர் எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக நிறைவேற்றப்பட உள்ளது.
இக் குழாய் பதிப்புக்காக மேற்சொன்ன ஏழு மாவட்டங்களில் 136 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பயன்படுத்திக் கொள்வது என கெயில் இந்தியா நிறுவனம் முடிவு செய்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
குழாய் பதிக்கப்படும் இடத்திலிருந்து இரு புறமும் தலா 10 மீட்டர் என்ற வகையில் 20 மீட்டர் அகலத்திற்கு நிலத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த இடத்தில் மரம் நடுவது, வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது,குழாய் கிணறு அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்த குழாய்கள் மற்றும் சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நில உரிமையாளரே பொறுப்பு என்றும் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தும் சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தங்களது நிலத்தை மட்டுமே பாதுகாப்ப முடியும். எரிவாயு குழாய்களை பாதுகாக்க முடியாது.
எனவே, தாங்கள் உடனே தலையிட்டு, விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஓரம், ரயில் பாதை ஓரங்களில் என மாற்று வழியில் இந்த நிறைவேற்ற மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications