செத்துருவேன்... 13 வயது மாணவியிடம் 'காதல் பிச்சை' கேட்ட 15 வயதுப் பையன் கைது!!
பண்ருட்டி: நீயில்லாமல் நான் இல்லை, நீ மட்டும் என்னைக் காதலிக்காவிட்டால் செத்துப் போய்டுவேன் என்று 13 வயது மாணவியின் கையைப் பிடித்து கலாட்டா செய்த 15 வயது மாணவனை, மாணவியின் உறவினர்கள் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த 'காதல் பிச்சை' விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்த 13 வயது மாணவி, அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கூலி வேலை பார்த்து வருகிறான். இவனுக்கு அந்த மாணவி மீது காதல் வந்துள்ளது.
அந்த மாணவியின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு கடந்த 2 மாதமாக தொடர்ந்து போன் பேசி, என்னைக் காதலி என்று கூறி அணத்தி வந்துள்ளான்.
இதுகுறித்து தனது குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் மாணவி கூறியிருந்தார்.இருப்பினும் அந்த சிறுவனின் தொல்லை நின்றபாடில்லை. இந்த நிலையில், அந்த மாணவி பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்த கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி காதல் வசனம் பேசியுள்ளான் அந்த சிறுவன். நீ மட்டும் என்னைக் காதலிக்காவிட்டால் செத்துப் போய் விடுவேன் என்று அவன் பேசினான்.
அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினர்கள் அந்த சிறுவனைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாரிடம் கொண்டு போய்
ஒப்படைத்தனர். போலீஸார் சிறுவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications