இன்று வீர வாஞ்சிநாதனின் 101வது நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை
செங்கோட்டை: வீர வாஞ்சிநாதனின் 101வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை மட்டும் போதாது, ஆங்கிலேயனை எதிர்க்க ஆயுத புரட்சியும் தேவை என்பதை உணர்த்திடும் வண்ணம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுக்கும் வண்ணமும் அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலை 10.50க்கு செங்கோட்டையைச் சேர்ந்த வீர வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆஷ்துரையை சுட்டுக் கொன்று விட்டு அதே ரயில் நிலையத்தில் வைத்து தன்னை தானே சுட்டு வீர வாஞ்சி (களச்சாவு) வீர மரணம் அடைந்தார். அவரது வீரத்தை போற்றும் வண்ணம் 1987ம் ஆண்டு செங்கோட்டையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் சிலை அமைக்கப்பட்டது. இன்று அவரது 101வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு வீரவாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிகர சுப்பிரமணியன், பேரன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன், நகர்மன்ற தலைவர் மோகன கிருஷ்ணன், தியாகிகளின் வாரிசுகள், செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள், அதி்முக, திமுக, கம்யூனிஸ்ட், பாஜக, பொதுநல அமைப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications