சாப்ட்வேர் என்ஜினியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: வீட்டில் இருந்த ஸ்கூட்டியில் எஸ்கேப்
சென்னை: சென்னையை அடுத்த சேலையூர் அருகே கம்ப்யூட்டர் என்ஜினியரின் வீட்டின் கதை உடைத்த மர்ம் நபர்கள் அங்கிருந்த 100 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல் முத்தலிப் (35). பெருங்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ளார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் அவர் குடும்பத்தோடு கிளம்பி பெருங்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டுக் கதவு உடைத்திருந்ததைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த வைர மோதிரம் உள்பட 100 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தன. மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியையும் காணவில்லை. கொள்ளையர்கள் நகைகளைத் திருடிக் கொண்டு ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. அப்படி இருக்கையில் யாருக்கும் தெரியாமல் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications