ப்ளூ பிலிம் எடுத்திருக்கேன்... சிங்கப்பூரிலிருந்தபடி மனைவி, மாமியாரை மிரட்டும் நபர்!
மதுரை: சிங்கப்பூரில் இருந்தபடி, மனைவியையும், மாமியாரையும் ஆபாசப் படம் எடுத்திருப்பதாக கூறி மிரட்டி வரும் நபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு வயது 35 ஆகிறது. இவருக்கும், மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த 25 வயதான இளவரசி என்பவருக்கும் 2007ம் ஆண்டு கல்யாணம் செய்து வைத்தனர். கல்யாணத்தின்போது சீர்வரிசையை சிறப்பாக செய்த இளவரசி குடும்பத்தால் கூடவே 43 பவுன் நகைகளையும் மகளுக்குப் போட்டு அனுப்பினர்.
கல்யாணமான ஒரே மாதத்தில் கர்ப்பமானார் இளவரசி. இந்த நிலையில் நான் சிங்கப்பூர் போகப் போகிறேன். அங்கு போய் வேலை பார்த்தால் நிறைய சம்பாதிக்கலாம். குழந்தையை நன்றாக வளர்க்கலாம் என்று மனைவியிடம் கூறியுள்ளார் ராஜப்பா. மேலும், போக வரச் செலவுக்காக 2 லட்சம் ரூபாயை உங்க வீட்டில் வாங்கி வா என்றும் இளவரசியை நச்சரித்துள்ளார்.
ஆனால் எப்படி பெற்றோரிடம் பணம் கேட்பது என்று தயங்கிய இளவரசி, தான் போட்டிருந்த நகைகளில் சிலவற்றை கழற்றி ராஜப்பா கையில் கொடுத்து பணமாகிக அதை வைத்து சிங்கப்பூர் போங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் நகைகளை விற்று வந்த ராஜப்பா, தான் கொண்டு வந்த பணத்தை யாரோ திருடி விட்டதாக மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் இளவரசி. அத்தோடு நில்லாத ராஜப்பா மீண்டும் பணம் கேட்டு இளவரசியை நச்சரித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் மீதமிருந்த நகைகளையும் ராஜப்பாவிடம் கொடுத்தார் இளவரசி.
இதை வைத்துக் கொண்டு 2008ம் ஆண்டு சிங்கப்பூருக்குப் போனார் ராஜப்பா. ஆனால் போனவர், மனைவியை மறந்து விட்டு அங்கு தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து இளவரசியையும், அவரது குடும்பத்தினரையும் போன் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் தொடர்ந்து அவதூறாகப் பேசி திட்டி வந்துள்ளனர்.
இதில் உச்சமாக, உன்னையும், உனது தாயாரையும் ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறி ராஜப்பா, இளவரசியை மிரட்டியதால் பெரும் வேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து மதுரை தெற்குவாசல் போலீஸில் புகார் தரப்பட்டது. புகாரைப் பதிவு செய்த போலீஸார் தற்போது ராஜப்பாவை எப்படிக் கைது செய்வது என்பது குறித்து தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications