ஆகஸ்ட் 4, 5ல் மதுரையில் அகில உலக சவுராஷ்ட்ரா மாநாடு: மோடி பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆக்ஸட் மாதம் 4 மற்றும் 5ம் தேதி மதுரையில் நடக்கும் அகில உலக சவுராஷ்ட்ரா மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைக்கிறார்.

இது குறித்து சவுராஷ்ட்ரா முன்னேற்றக் கழக தலைவர் வி.ஜி.ராம்தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அகில உலக சவுராஷ்ட்ரா மாநாடு மதுரை கே.எல்.என். பாலிடெக்னிக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி அகில உலக சவுராஷ்ட்ரா மாநாட்டை குஜராத் முதல்வரும் எங்கள் இனத்தைச் சேர்ந்தவருமான நரேந்திர மோடி தொடங்கி வைகின்றார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டோம். மேலும் நாசா தலைமை விஞ்ஞானி எல்.ஆர்.குபேந்திரன் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்.

இந்த மாநாட்டில் சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சவுராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

எங்கள் இன மக்கள் தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேல் இருந்தும் எந்தவித அரசியல் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவர்கள் நெசவு தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். இதனால் எங்கள் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், இந்த மாநாடு மூலம் எங்கள் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைப்போம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+