மத்திய அரசிலிருந்து விலக தயாராக இருக்கிறோம்: திரிணமூல் காங்கிரஸ்

ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து விட்டார். இதனால், அவரது கட்சிக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கேபினட் அமைச்சரும் 6 இணையமைச்சருக்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான மோதலைத் தொடர்ந்து, அவர்கள் 7 பேரும் பதவி விலக முடிவு செய்துவிட்டதாகவும் தங்களது ராஜினாமா கடிதத்தை மம்தா பானர்ஜியிடம் கொடுத்து விட்டதாகவும் நேற்று இரவு தகவல் பரவியது. இதனால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு கிளம்பியது.
ஆனால், இத் தகவலை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த அக்கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய மம்தா, மத்திய அரசிலிருந்து நாமாக வெளியேறினால் இந்த அரசைக் கவிழ்ப்பதற்காகத்தான் அப்படிச் செய்தோம் என்று மக்களிடையே தவறாகப் பிரசாரம் செய்யப்படும் என்றார்.
க்குப் பின்னர், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயா நிருபர்களிடம் பேசுகையில்,
திரிணமூல் கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சரும், இணை அமைச்சராக உள்ள ஆறு பேரும் தங்களுடைய ராஜிநாமா கடிதங்களை மம்தாவிடம் தந்தனர் என்று கூறப்படுவது தவறு. இந்த அரசை பலவீனப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கிளப்பிவிடப்பட்ட கீழ்த்தரமான செய்தி.
எங்களால் மத்திய அரசு கவிழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அப்படியொரு முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஒரு பாரமாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்களானால் எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்திய அரசிலிருந்து விலக மனதளவில் தயாராக இருக்கிறோம். ராஜிநாமா செய்ய எங்களுக்கு ஒரு விநாடி கூட ஆகாது.
ஆனால், கட்சி தலைமை உத்தரவிட்டாலும், காங்கிரஸ் கட்சி எங்களை கூட்டணியில் வைத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும், எந்த நேரத்திலும் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம். எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவோம்.
ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம்தான் சிறந்த வேட்பாளர் என்று இன்னமும் நாங்கள் நம்புகிறோம். அப்துல் கலாம்தான் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என்று எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி எடுத்த முடிவு மிகவும் சரியானதுதான். இந்த முடிவில் மாற்றம் இல்லை.
ஜனாதிபதி பதவிக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் நீண்ட நாள் இருக்கிறது. ஆகவே, அப்துல் கலாமை சந்தித்து, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்ற தனது கருத்தை மாற்றிக் கொண்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவரை சம்மதிக்க வைக்க முயற்சி மேற்கொள்வோம்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்ப வில்லை என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தால், எங்கள் எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் மீண்டும் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.
இந் நிலையில் கலாம் போட்டியிடாத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க மம்தா முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications