வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம்: ஜூன் 22-ல் திமுக அவசர செயற்குழு

Subscribe to Oneindia Tamil

Veerapandi S Arumugam
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறித்து விவாதித்து முடிவெடுக்க கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் ஜூன் 22ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் உச்சகட்டமாக சேலம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல, ஏற்கெனவே கைதாகி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) விடுதலை செய்யப்பட்ட மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி மீண்டும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக அரசின் இத்தகைய அத்துமீறலைக் கண்டித்து எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவெடுக்க திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.

அதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் ஜெயலலிதா அரசின் அடக்குமுறை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று நடைபெறுகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை, மாவட்ட செயலாளர்களை, அடக்குமுறைகளை வீசியே தகர்த்து விடலாமென்று எண்ணி செயல்படுகின்றது.

அட்டகாசத்தின் உச்சகட்டமாக நெருக்கடி கால கொடுமைகளையும் அராஜக அரசுகளின் பூதாகர பொய் வழக்குகளையும் சந்தித்து தியாகத்தழும்பு பெற்ற தி.மு.க. தளபதிகளில் ஒருவரும், தி.மு.க.வை கட்டிக் காக்கும் தீரர்களில் ஒருவருமான சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதா குண்டர் சட்டத்தை ஏவியுள்ளார்.

அது போலவே மதுரை மாநகர மாவட்ட செயலாளர் தளபதியை 2 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கைது செய்து நேற்று முன்தினம் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்த பிறகு, நேற்று வேறு ஒரு வழக்கை அவர் மீது திணித்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகளை ஜனநாயகத்திலும், அறவழியிலும் நம்பிக்கை கொண்டுள்ளதும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணாவின் பொன்மொழியின் வழியை பின்பற்றி நடப்பதுமான தி.மு.க. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வீண்பழி சுமத்தும் படலத்தை, தமிழகம் இனியும் தாங்காது. இந்த செயலை கண்டிப்பதற்கு எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் 22ம் தேதிசென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+