சம்மன் வரவில்லை, வந்தால் சட்டப்படி சந்திப்பேன்: ரோசைய்யா
சென்னை: ஆந்திர லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் தனக்கு வந்து சேரவில்லை என்றும், வந்தால் வழக்கை சட்டப்படி சந்திக்கப் போவதாகவும் தமிழக ஆளுனர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.
ரோசைய்யா ஆந்திர முதல்வராக இருந்தபோது அமீர்பேட்டை பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை உரியவர்களுக்கு திருப்பி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் திரும்பி வழங்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதில் அன்றைய முதல்வரான ரோசைய்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக ஆளுனர் ரோசைய்யாவிற்கு ஹைதராபாத் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் ரோசைய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூலமே நான் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு சம்மன் வந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications